புதுக்கோட்டை: தமிழ்நாட்டில் யாரும் இந்தி கற்றுக்கொள்வதை நாங்கள் தடுக்கவில்லை, இந்தியை திணிக்காதீர்கள் என்பதுதான் எங்களது நிலைப்பாடு என புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி பேட்டியளித்துள்ளார். நாங்கள் யாரையும் கிண்டல் செய்ய வேண்டிய அவசியமில்லை, இந்தி கற்றுக்கொண்டபோது தான் கேலி செய்யப்பட்டதாக நிர்மலா சீதாராமன் நேற்று பேசிய நிலையில் அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்துள்ளார்.