கறம்பக்குடியில் சிறுவனை தெரு நாய் கடித்து குதறியது

கறம்பக்குடி,டிச.3: கறம்பக்குடியில் சிறுவனை தெரு நாய் கடித்து குதறியதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பெரிய கடை வீதியை சேர்ந்தவர் சுக்கூர். வியாபாரி. இவரது மகன் அப்ரான் (4 1/2). இவன் கறம்பக்குடியில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் யுகேஜி படித்து வருகிறான். நேற்று பள்ளிக்குச் சென்று விட்டு மாலை வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, அந்த வழியாக ஓடி வந்த தெரு நாய் ஒன்று சிறுவனை கடித்து கொதறியது. அவனது கன்னத்தில், தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக உறவினர்கள், குடும்பத்தினர் ஓடிவந்து தெரு நாயை, விரட்டி அடித்து விட்டு சிறுவனை கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். தெரு நாய் கடித்து காயம் அடைந்த மாணவன் கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் கறம்பக்குடியில் பெரும் பரபரப்பையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தெரு நாய்களை உடனடியாக அப்புறப்படுத்த அனைத்து தரப்பினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post கறம்பக்குடியில் சிறுவனை தெரு நாய் கடித்து குதறியது appeared first on Dinakaran.

Related Stories: