- பாளிகோண்டா அரசு பள்ளி
- சென்னை
- பள்ளிகொண்டா
- துணை
- முதல் அமைச்சர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- உதயநிதி ஸ்டாலின்
- திருப்பத்தூர்
- வேலூர்
- ராணிப்பேட்டை
- தலைமைச் செயலக புள்ளியியல் ஆய்வாளர்
- செந்தில்குமார்
பள்ளிகொண்டா, டிச.4: தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வரும் 6, 7ம் தேதிகளில் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கி களஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
இதையொட்டி தலைமை செயலக புள்ளியியல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான குழுவினர் நேற்று வேலூர் மாவட்டத்தில் முன் களஆய்வு நடத்தினர். அதன்படி, பள்ளிகொண்டா பேரூராட்சியில் உள்ள அரசு பள்ளிகள், மருத்துவமனை மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்தனர். அதன்படி, பத்மாவதி நகரில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, வாரச்சந்தை மேம்படுத்துதல், கழிவுநீர் கால்வாய் அமைத்தல் போன்ற திட்டப் பணிகளை ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, பள்ளிகொண்டா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளின் கற்றல் திறன், சத்துணவின் தரம், மாணவிகளுக்கு நாப்கின் வழங்கப்படுவது குறித்து ஆய்வு செய்தனர். பின்னர், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று நோயாளிகள், கர்ப்பிணி பெண்களிடம் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தனர். அப்போது, பதிவேடுகள் பராமரிப்பில் குறைபாடுகள் இருப்பதை கண்ட குழுவினர் கணினி முறைைய பயன்படுத்தவும், குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை மற்றும் பிரசவம் அங்கு நடைபெறுவதற்கான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். ஆய்வின்போது, பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி, தலைவர் சுபபிரியாகுமரன், துணைத்தலைவர் வசீம் அக்ரம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சந்திரன், மருத்துவ அலுவலர் ஐஸ்வர்யா, தலைமை ஆசிரியை ரோஜா மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.
The post பள்ளிகொண்டா அரசு பள்ளியில் மாணவிகளின் கற்றல் திறன் சென்னை தலைமை செயலக அதிகாரி ஆய்வு appeared first on Dinakaran.