சென்னையில் வரும் 18ம் தேதி திமுக தலைமை செயற்குழு கூட்டம்

சென்னை: இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு 2 முறை செயற்குழு கூட்டத்தையும், ஒரு முறை பொதுக்குழு கூட்டத்தையும் கூட்ட வேண்டும் என்பது விதி ஆகும். அந்த வகையில் திமுகவின் தலைமை செயற்குழு கூட்டம் வருகிற 18ம் தேதி(புதன்கிழமை) நடைபெற உள்ளது. இது குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 18ம் தேதி(புதன்கிழமை) காலை 10 மணி அளவில் திமுக தலைமைச் செயற்குழு கூட்டம் சென்னை கலைஞர் அரங்கில் நடைபெறும். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த கூட்டத்தில் திமுகவின் ஆக்க பணிகள் விவாதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த கூட்டத்தில் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 200க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் திமுக ஆட்சி அமைய கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அயராது உழைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்றும் கூறப்படுகிறது.

The post சென்னையில் வரும் 18ம் தேதி திமுக தலைமை செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: