புரோபா-3 செயற்கைக்கோளுடன் விண்ணில் இன்று பாய்கிறது பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட்

சென்னை: இஸ்ரோ பல்வேறு விண்வெளி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு சந்திரயான் 3, ஆதித்யா எல்1 ஆகிய திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி உலகை திரும்பி பார்க்க வைத்தது. இஸ்ரோ தனது தனித்துவ திட்டங்கள் மற்றும் செயற்கோள்களை விண்ணில் ஏவுவதோடு மட்டும் இல்லாமல், தனியார் செயற்கைக்கோள் மற்றும் வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்துகிறது.

இதற்காக இந்திய விண்​வெளி ஆய்வு மையத்​தின் கீழ் செயல்​படும் நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் நிறு​வனம் வெளி​நாட்டு செயற்​கைக்​கோள்களை விண்​ணுக்கு அனுப்பும் வர்த்தக நடவடிக்கைகளை மேற்​கொண்டு வருகிறது. அதன்படி இதுவரை 430க்​கும் மேற்​பட்ட வெளி​நாட்டு செயற்​கைக்​கோள்களை நியூ ஸ்பேஸ் நிறு​வனம் வெற்றிகரமாக விண்​ணில் செலுத்​தி​யுள்​ளது. பெரும்​பாலான உலக நாடு​களின் விண்​வெளி ஆய்வு நடவடிக்கைகளுக்கு இஸ்ரோ பங்களித்து வரும் நிலை​யில், அண்மை​யில் ஐரோப்பிய விண்​வெளி ஆய்வு நிறு​வனத்​துடன் நியூ ஸ்பேஸ் இந்தியா நிறு​வனம் புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்​கொண்​டது.

அதன்​படி, புரோபா-3 என்று பெயரிடப்பட்ட இணை செயற்கைகோளை ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் உருவாக்கி உள்ளது. இந்த செயற்கைக்கோள்கள் சூரியனின் ஒளிவட்டப் பகுதியை ஆய்வு செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 550 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) ஏவுதளமான, ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று மாலை 4.08 மணிக்கு பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது. ராக்கெட்டுக்கான எரிபொருள் நிரப்பப்பட்ட நிலையில், இறுதிக்கட்டப் பணியான கவுன்டவுன் நிர்ணயம் செய்யப்பட்டு அதற்கான 25 மணி நேரம் கவுன்டவுன் நேற்று மாலை 3.08 மணிக்கு தொடங்கியது.

The post புரோபா-3 செயற்கைக்கோளுடன் விண்ணில் இன்று பாய்கிறது பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் appeared first on Dinakaran.

Related Stories: