திருவொற்றியூர்: மணலி மண்டலம், 19வது வார்டு, மாசிலாமணி நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான குளம் உள்ளது. இந்த குளத்தை ₹50 லட்சம் செலவில் புனரமைக்க மாநகராட்சி திட்டமிட்டு, இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த குளத்தில் தனியார் ஒருவர் ஆக்கிரமித்து தகர கொட்டகை அமைத்திருப்பதாக மணலி மண்டல அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது.
இதையடுத்து மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையர் காட்டா ரவி தேஜா தலைமையில் உதவி ஆணையர் கோவிந்தராசு, செயற்பொறியாளர் தேவேந்திரன் ஆகியோர் மாசிலாமணி நகருக்கு வந்து, குளத்தில் கட்டப்பட்டிருந்த தகர கொட்டகையை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர்.
The post மணலி மாசிலாமணி நகரில் குளம் ஆக்கிரமிப்பு அகற்றம் appeared first on Dinakaran.