சின்னத்திரை நடிகர் மரணம்

சென்னை: திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் யுவன்ராஜ் நேத்ரா. பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து உள்ளார். சின்னத்திரையில் கடந்த 25 ஆண்டுகளாக நடித்து வந்தார். தன்னுடன் டிவி தொடர்களில் நடித்த தீபா என்பவரை காதலித்து மணந்தார். இவர்களுக்கு அஞ்சனா, அபிநயா என்ற 2 மகள்கள் உள்ளனர்.

மூத்த மகள் அபிநயா சின்னத்திரையில் நடித்து வருகிறார். கடந்த ஜூலை மாதம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அபிநயா வெளியிட்ட பதிவில், தன்னுடைய தந்தை ஐசியூவில் இருப்பதாக தெரிவித்திருந்தார். யுவன்ராஜ் நேத்ரனுக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்றிரவு அவர் காலமானார்.

The post சின்னத்திரை நடிகர் மரணம் appeared first on Dinakaran.

Related Stories: