×

மசூதி – கோயில் விவகாரத்தால் கலவரம் சம்பல் பகுதியில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இன்று ஆய்வு

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் இன்று நேரில் சென்று பார்வையிட உள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் சம்பல் பகுதியில் இருந்த ஹரிஹர் இந்து கோயிலை இடித்து விட்டு ஜமா மசூதி கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நீதிமன்ற உத்தரவுப்படி தொல்லியல் துறையினர் கள ஆய்வுக்கு சென்றபோது வன்முறை
வெடித்தது. இதில் 4 பேர் பலியாகினர்.

இந்த விவகாரம் நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிரொலித்தது. தொடர்ந்து அந்த பகுதியில் கலவரம் நீடிப்பதால் சம்பல் பகுதியில் உரிய அதிகாரிகள் அனுமதியின்றி வௌியாட்களோ, பிற சமூக அமைப்புகளோ அல்லது பொதுமக்கள் பிரதிநிதிகளோ மாவட்ட எல்லைக்குள் நுழையக் கூடாது. அங்கு அமைதி, சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும் விதமாக வௌியாட்கள் நுழைய இம்மாதம் 31ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று சம்பல் பகுதிக்கு சென்று பார்வையிட உள்ளார். இதுகுறித்து உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் கூறியதாவது, “சம்பல் பகுதிக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, உத்தரபிரதேசத்தை சேர்ந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் செல்ல உள்ளனர். அவர்களுடன் உத்தரபிரதேச காங்கிரஸ் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே இருப்பார்.

மேலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தியும் செல்வார்” என்று தெரிவித்தார்.  இதுகுறித்து சம்பல் காவல் கண்காணிப்பாளர் கிரிஷன் குமார் கூறுகையில், “சம்பலில் பிஎன்எஸ்எஸ் 163 பிரிவின்கீழ் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. வௌியாள்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அவர்கள்( ராகுல் காந்தி உள்ளிட்டோர்) வந்தால் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்” என்றார்.

The post மசூதி – கோயில் விவகாரத்தால் கலவரம் சம்பல் பகுதியில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இன்று ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Priyanka Gandhi ,Sambal ,Lucknow ,Uttar Pradesh ,Jama Masjid ,Harihar Hindu temple ,Uttar Pradesh.… ,
× RELATED மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான...