முன்னதாக புனிதக்கொடிகள் நேற்று மதியம் நாகை மீரா பள்ளி வாசல் வந்தடைந்தது. அங்கு அனைத்து முஸ்லிம் ஜமாத்தார்கள் முன்னிலையில் பாத்திஹா ஓதப்பட்டது. இதை தொடர்ந்து பெரிய கண்ணாடி அலங்கார ரதத்தில் புனிதக்கொடி வைக்கப்பட்டது. பெரிய கண்ணாடி அலங்கார ரதத்தை தொடர்ந்து சாம்பிராணி சட்டி ரதம், செட்டிப்பல்லக்கு, டீஸ்டா கப்பல், சின்ன ரதம், போட் மெயில் ஆகிய ரதங்கள் அடுத்தடுத்து அலங்கரிக்கப்பட்டு நின்றது.
மதியம் 2 மணியளவில் மீரா பள்ளிவாசலில் இருந்து புறப்பட்ட கொடி ஊர்வலம் யாஹூன் பள்ளி தெரு, நூல்கடை சந்து, சாலப்பள்ளித்தெரு, வெங்காய கடைத்தெரு, பெரிய கடைவீதி, வெளிப்பாளையம், காடம்பாடி, வடக்கு பால்பண்ணைச்சேரி வழியாக நாகூர் சென்றது. பின்னர் அங்கிருந்து நாகூரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நாகூர் தர்கா அலங்கார வாசலுக்கு இரவு வந்தடைந்தது. கொடி ஊர்வலத்தில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
நாகையில் இருந்து நாகூர் வரை சாலை ஓரங்களில் பொதுமக்கள் நின்று கொடி ஊர்வலத்தை கண்டு ரசித்தனர். ஊர்வலம் நாகூர் தர்கா அலங்கார வாசல் வந்தவுடன் கொடிகள் இறக்கப்பட்டு சாஹிப் மினரா, தஞ்சையை ஆட்சி செய்த மாமன்னர் கட்டிக்கொடுத்த நாகூர் தர்கா அலங்கார வாசல் முன்பு அமைந்துள்ள பெரிய மினரா, தலைமாட்டு மினரா, ஓட்டு மினரா, முதுபக் மினரா ஆகிய 5 மினராக்களுக்கு கொடிகள் கொண்டு செல்லப்பட்டது. துவா ஓதிய பின்னர் 5 மினராக்களில் ஒரே நேரத்தில் கொடி ஏற்றப்பட்டது. அப்போது நாகூர் தர்கா மின்விளக்குகளில் ஜொலித்தது. வாணவேடிக்கை நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் வரும் 11ம் தேதி இரவு நடைபெறுகிறது. நாகையில் இருந்து புறப்படும் . மறுநாள் அதிகாலை நாகூர் வந்தடையும். பின்னர் நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. கொடி ஊர்வலம், கொடியேற்றத்தை முன்னிட்டு எஸ்பி அருண் கபிலன் தலைமையில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
The post 468வது கந்தூரி விழா; நாகூர் தர்காவில் கொடியேற்றம்: 11ம் தேதி சந்தனக்கூடு ஊர்வலம் appeared first on Dinakaran.