கனிமவளத்துறை வழங்கும் அனுமதி சீட்டுகளில் முறைகேடு: மணல் லாரி உரிமையாளர்கள் கலெக்டரிடம் மனு

காஞ்சிபுரம்: தமிழ்நாடு அரசின் கனிமவளத்துறை கட்டுப்பாட்டின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட கல்குவாரிகள், கல் அரவை நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. கல்குவாரிகளிலிருந்து கனரக லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படும் கருங்கல் சக்கை, கருங்கல் ஜல்லி, எம்சாண்ட் போன்றவைகளுக்கு கனிமவளத்துறை அதிகாரிகள் கையொப்பமிட்ட அனுமதி சீட்டை கல்குவாரி உரிமையாளர்கள் வழங்கி வருகின்றனர்.

கல்குவாரிகளிலிருந்து கொண்டு செல்லப்படும் பொருள்களுக்கு கையினால் எழுதி அனுமதி சீட்டு வழங்கப்படுவதால் பல்வேறு முறைகேடு நடைபெறுவதாக புகார் எழுந்து வருகிறது. மேலும் பொருட்களை எடுத்து செல்லும் லாரி ஓட்டுனர்களும், லாரி உரிமையாளர்களும் காவல்துறை மற்றும் வருவாய்த்துறையிடம் குற்றவாளி களாக சிக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் தலைமையில், சங்க நிர்வாகிகள் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வருகை தந்து, அனைத்து துறைகளிலும் கணினி பயன்பாடு வந்துவிட்ட பிறகும் கனிமவளத்துறையில் மட்டும் கணினி ரசீது வழங்கப்படாமல் கைகளினால் எழுதி ரசீது வழங்கப்படுவது பல்வேறு முறைகேடுக்கு வழி வகுக்கிறது. எனவே, கனிமவளத்துறையில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கும் வகையில் கல்குவாரியில் இருந்து கொண்டு செல்லும் பொருட்களுக்கு கணினி ரசீதை வழங்க வேண்டுமென காஞ்சிபுரம் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

The post கனிமவளத்துறை வழங்கும் அனுமதி சீட்டுகளில் முறைகேடு: மணல் லாரி உரிமையாளர்கள் கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Related Stories: