- முதல் அமைச்சர்
- எம். ஸ்டாலின்.
- சென்னை
- மாற்றுத்திறனாளிகளின் சர்வதேச நாள்
- ஐக்கிய நாடுகள்
- மு.கே ஸ்டாலின்
சென்னை: ஐக்கிய நாடுகள் சபை வழிகாட்டுதல்படி 1992ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3ம் தேதி சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில், மாற்றுத்திறனாளிகளின் பிரச்னைகளைப் புரிந்துகொள்வது. அவர்களைக் கண்ணியத்துடன் நடத்துவது மற்றும் அவர்களின் நல்வாழ்வு, உரிமைகள், அவர்களுக்கு உரிமை கொடுப்பது இந்த நாளின் நோக்கமாகும்.
இந்நிலையில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு “சவால்களைக் கடந்து வெல்வது மாற்றுத்திறனாளிகளின் சாதனை; அந்தச் சவால்களைக் களைவதே நம் கடமை” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது; “அனைவரையும் உள்ளடக்கிய எதிர்காலத்துக்கு மாற்றுத்திறனாளிகளின் தலைமைத்துவத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பதை இந்த ஆண்டுக்கான உலக மாற்றுத்திறனாளிகள் நாள் கருப்பொருளாக
ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது!
அந்த வகையில், மாற்றுத்திறனாளர்களின் உரிமைகளையும் நலனையும் காப்பதுடன், அவர்கள் உயர்பதவிகளுக்குச் செல்ல வேண்டும், நல்ல வேலைவாய்ப்புகளைப் பெற வேண்டும் என்பதிலும் அக்கறை கொண்டு செயலாற்றி வருகிறது நமது திராவிட மாடல் அரசு.
சவால்களைக் கடந்து வெல்வது மாற்றுத்திறனாளிகளின் சாதனை; அந்தச் சவால்களைக் களைவதே நம் கடமை” என முதல்வர் தெரிவித்துள்ளார்.
The post சவால்களைக் கடந்து வெல்வது மாற்றுத்திறனாளிகளின் சாதனை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.