* செங்கோட்டையில் இருந்து மதுரை வழியாக மயிலாடுதுறை வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.16848) இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 5-ந் தேதி, 7-ந் தேதி, 19-ந் தேதி, 20-ந் தேதி, 21-ந் தேதி, 23-ந் தேதி, 26-ந் தேதி, 27-ந் தேதி, 30-ந் தேதி, அடுத்த மாதம் 3, 6 மற்றும் 8-ந் தேதிகளில் விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். அந்த பாதையில் மானாமதுரை மற்றும் காரைக்குடியில் இந்த ரயில் நின்று செல்லும்.
* நாகர்கோவிலில் இருந்து மதுரை வழியாக மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.16352) வருகிற 19-ந் தேதி, 26-ந் தேதிகளில் விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். மானாமதுரையில் இந்த ரயில் நின்று செல்லும்.
* கன்னியாகுமரியில் இருந்து மதுரை வழியாக மேற்குவங்க மாநிலம் ஹவுரா வரை இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.12666) வருகிற 21-ந் தேதி விருதுநகரில் இருந்து மானாமதுரை வழியாக திருச்சி செல்லும். மானாமதுரையில் மட்டும் நின்று செல்லும்.
* குருவாயூரில் இருந்து மதுரை வழியாக சென்னை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.16128) 20-ந் தேதி, 25-ந் தேதி, அடுத்த மாதம் 2 மற்றும் 5-ந் தேதிகளில் விருதுநகரில் இருந்து மானாமதுரை வழியாக திருச்சி செல்லும். இந்த ரயிலும் மானாமதுரையில் மட்டும் நின்று செல்லும்.
* மதுரையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் செல்லும் வாராந்திர அனுராவத் எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.22631) வருகிற 26-ந் தேதி மதுரையில் இருந்து 2 மணி நேரம் தாமதமாக மதியம் 2 மணிக்கு புறப்படும்.
The post பராமரிப்பு பணி காரணமாக மதுரை வழியாக செல்லும் ரயில்களின் சேவையில் மாற்றம்.! தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.