தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 14,000 கனஅடியில் இருந்து 21,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் ஒகேனக்கலுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.