திருக்குவளை பகுதியில் இன்று மின் விநியோகம் நிறுத்தம்

கீழ்வேளூர்,டிச.3: நாகை தெற்கு மாவட்ட மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: திருக்குவளை துணை மின் நிலைய மாதாந்திர பராமரிப்பு இன்று (3ம்தேதி) நடக்கிறது. இதனால், திருக்குவளை, தலைஞாயிறு, காடந்தெத்தி, மணக்குடி, வடுவூர், வாழ்கரை, செம்பியனமகாதேவி, பலக்குறிச்சி, மினம்பநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post திருக்குவளை பகுதியில் இன்று மின் விநியோகம் நிறுத்தம் appeared first on Dinakaran.

Related Stories: