பொன்னமராவதி,டிச.3: பொன்னமராவதி பகுதியில் தொடர்ந்து மழை சாரலாக இருந்து வந்த நிலையில் நேற்று நாள் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. பொன்னமராவதி பகுதியில் கடந்த 7 நாட்களாக தூறல், சாரல் மட்டுமே காணப்படுகின்றது. மழையினை நம்பி பொன்னமராவதி பகுதியில் உள்ள பல்வேறு கிராம மக்கள் நடவு செய்துள்ளனர். ஆனால் மழை வரும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த நேரத்தில் தொடர்ந்து மழை வராமல் தூரலாகவே விழுவதால் இப்பகுதி விவசாயிகள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர். கடந்த ஆண்டு கூட இதே காலக்கட்டத்தில் மழைபெய்து குளம், குட்டை, கண்மாய்களில் கொஞ்சம் தண்ணீர் கிடந்தது. ஆனால் இப்போது கண்மாய் மற்றும் நீர் நிலைகளில் தண்ணீர் இன்றி காணப்படுகின்றது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கன மழைபெய்து வரும் வேலையில் பொன்னமராவதி பகுதி சிறிது வெள்ளம் கூட போகும் அளவிற்கு மழை பெய்யவில்லை. இதனால் தாங்கள் மழையினை நம்பி சாகுபடி செய்த நெல் அறுவடைக்கு வருமா என்ற சந்தேகம் அடைந்துள்ளனர். விவசாயிகள் தொடர்ந்து சாரலாகவே காணப்பட்ட பகுதியில் நேற்று நாள் முழுவதும் வெயின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.
The post பொன்னமராவதி பகுதியில் மழை ஓய்ததால் வெயிலின் தாக்கம் அதிகம் appeared first on Dinakaran.