பஸ் நிலையத்தில் வாகன காப்பகத்தை செயல்படுத்த மனு

விருதுநகர், டிச.3: விருதுநகர் பழைய பஸ் நிலைய வாகன காப்பகத்தை செயல்படுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் விசிக நிர்வாகி சக்திவேல் நேற்று மனு அளித்தார். மனுவில், விருதுநகர் பழைய பஸ் நிலையம் முன்புறம் 50 ஆண்டுகளாக நகராட்சிக்கு சொந்தமான இரு சக்கர வாகன காப்பகம் செயல்பட்டு வருகிறது.

தற்போது இரு சக்கர வாகன காப்பகத்தை டெண்டர் விடுவதை நிறுத்தி, காம்ப்ளக்ஸ் கட்ட முயற்சிகள் நடப்பதாக தெரிகிறது. இரு சக்கர வாகன காப்பகம் செயல்படாததால் பஸ் நிலையம் வரும் பயணிகள் தங்களது வாகனங்களை சாலை ஓரங்களில் நிறுத்தி செல்கின்றனர். இதனால் வாகன திருட்டு அதிகரித்துள்ளது. மக்கள் நலன் கருதி இரு சக்கர வாகன காப்பகத்தை மீண்டும் செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

The post பஸ் நிலையத்தில் வாகன காப்பகத்தை செயல்படுத்த மனு appeared first on Dinakaran.

Related Stories: