×

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்கள்

 

மஞ்சூர், டிச.3: திமுக தகவல் தொழில் நுட்ப அணி சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்டம் திமுக தகவல் தொழில் நுட்ப அணி சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி துணை அமைப்பாளரும் கவுன்சிலருமான சண்முகன் தலைமை தாங்கினார்.

தொடர்ந்து, திமுக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து முள்ளிமலை அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்கள், எழுது பொருட்கள், இனிப்புகள் வழங்கப்பட்டன. விழாவில் கீழ்குந்தா பேரூர் கழக செயலாளர் சதீஷ்குமார், அவை தலைவர் மாடக்கன்னு, பிரதிநிதி சிவராமன் மற்றும் ஒன்றிய, பேரூராட்சி நிர்வாகிகள் பிரபு, மகாலிங்கம், ராஜ்குமார், குமார், லுாயிஸ், சூர்யா, வெங்கடேஷ், ராமு, உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்கள் appeared first on Dinakaran.

Tags : Udayanidhi Stalin ,Manjoor ,Deputy Chief Minister ,DMK IT ,Nilgiri District ,DMK Information Technology Team ,Udhayanidhi Stalin ,
× RELATED என் பிறந்தநாளை முன்னிட்டு ஃப்ளெக்ஸ்...