மழையால் பாதித்த மக்கள் தங்கியுள்ள நிவாரண முகாம்களை காஞ்சி எம்எல்ஏ ஆய்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் கனமழை காரணமாக, பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள நிவாரண முகாம்களை எழிலரசன் எம்எல்ஏ நேரில் ஆய்வு செய்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில், பெஞ்சல் புயல் காரணமாக தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அதன்படி0ம் தேதி இரவு முதல் சூறைக்காற்றுடன் கூடிய தொடர்ந்து கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது.

இதனால் குளம், குட்டை அருகில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் இருளர் இன மக்கள், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் என அனைவரும் நிவாரண முகாமில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த, கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையம், நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் இ-சேவை ஆகியவை, தற்போது நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன.

இதில், காஞ்சிபுரம் தாலுக்காவில் 8 இடங்களிலும், உத்திரமேரூர் தாலுகாவில் 9 இடங்களிலும், வாலாஜாபாத் தாலுகாவில் 3 இடங்களிலும், குன்றத்தூர் பகுதியில் 6 இடங்கள் என மொத்தம் 25 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்முகாம்களில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 198 குடும்பங்களை சேர்ந்த 225 ஆண்கள், 256 பெண்கள், 220 குழந்தைகள் என மொத்தம் 564 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, தேவையான உணவு, படுக்கை வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், பெஞ்சல் புயல் காரணமாக 2 பேர் மற்றும் 12 கால்நடைகள் பலியாகியுள்ளன. 18 குடிசை வீடுகளும், 1017 ஏக்கர் விவசாய நிலங்களும் பாதிப்படைந்துள்ளன. 144 இடங்களில் மழைநீர் தேங்கியும், 34 மரங்கள் விழுந்துள்ளன. 51 முகாம்கள் நடத்தப்பட்டு, இதில் 1741 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும், நிவாரண முகாம்களில் 74 பேர் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 564 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு, மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களை காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பாதிக்கப்பட்ட மக்களிளிடம், அவர்களின் குறைகளை கேட்டறிந்து, நிவாரண பொருட்களை வழங்கினார். ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாநகராட்சி மண்டல தலைவர் செவிலிமேடு மோகன், அரசு அதிகாரிகள் உள்ளிட்டடோர் உடனிருந்தனர்.

 

The post மழையால் பாதித்த மக்கள் தங்கியுள்ள நிவாரண முகாம்களை காஞ்சி எம்எல்ஏ ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: