இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை கொட்டி தீர்த்தது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், கள்ளகுறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதைபோல புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அதி கனமழை பெய்தது.இந்த நிலையில், நவம்பரில் அதி கனமழை கொட்டிய நிலையில், டிசம்பர் மாதத்தில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது டிசம்பரில் இயல்பை விட 31% அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சில மாவட்டங்களில் இயல்பைவிட 75% அதிகமாக மழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
The post டிசம்பர் மாதத்தில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.