வரும் முன் காப்போம்!

நன்றி குங்குமம் தோழி

வெள்ளம் வரும் முன் அணை போடல் வேண்டும். அதற்கு காரணமாக இருக்கும் மழை வரும் முன் முக்கியமாக சிலவற்றை கடைபிடிக்க வேண்டும்.

* முக்கிய ஆவணங்கள், ரேஷன் கார்டு உட்பட பிளாஸ்டிக் கவரில் வைத்து வங்கி லாக்கரில் வைத்து விடுங்கள். கீழ் வீடுகளில் வசிப்பவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக செயல்படுவது அவசியம்.

* பழைய துணிகளை துவைத்து மடித்து வைத்துக் கொள்ளுங்கள். ஈரத்தினை துடைக்க உதவும்.

* மின் வெட்டு ஏற்படும் என்பதால், டார்ச்லைட் மற்றும் மெழுகுவர்த்தியை தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

* தீப்பெட்டி கண்டிப்பாக நமுத்துப் போய் எரிய அடம் பிடிக்கும். தீப்பெட்டியை தகர டப்பாவில் போட்டு வையுங்கள்.

* மழைக்காலங்களில் வேண்டாத விருந்தினராக மரவட்டை, அட்டை போன்றவை உள்ளே நுழையும். இரவு படுக்கு முன் கதவு ஓரங்களில் எறும்பு பொடியை தூவுவது சிறந்தது.

* தண்ணீரை காய்ச்சி குடிக்கவும்.

* அட்டைப் பெட்டிகள் இருந்தால் பழைய பேப்பர் கடையில் போட்டுவிடுங்கள். கரையான் பிரச்னை இருக்காது.

* புத்தகங்களை பிரித்துத் துடைத்து டால்கம் பவுடர் தூவினால் கரையான் அரிக்காது.

* வேண்டாத பொருட்களை அகற்றிவிடுங்கள். கொசு பிரச்னையில் இருந்து தப்பிக்கலாம்.

தொகுப்பு: சரோஜா ரங்கராஜன், சென்னை.

The post வரும் முன் காப்போம்! appeared first on Dinakaran.

Related Stories: