இந்த பயிற்சி ஆட்டத்தில் ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், வாஷிங்டன் சுந்தர், கில், நிதிஷ் ரெட்டி ஆகியோர் அபாரமாக விளையாட கேப்டன் ரோகித் சர்மா மட்டும் 3 ரன்களில் ஆட்டம் இழந்தார். இந்த போட்டி இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், “இந்த ஆட்டம் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஒரு அணியாக எங்களுக்கு எது வேண்டும் என்று நினைத்தமோ, அதை நாங்கள் பெற்று விட்டோம் என்று நினைக்கின்றேன். முழு ஆட்டமும் எங்களுக்கு கிடைக்காதது கொஞ்சம் வருத்தம் தான்.
எனினும் எங்களுக்கு கிடைத்த நேரத்தை நாங்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இதன் மூலம் எங்களுக்கு தேவையான பயிற்சி கிடைத்திருக்கிறது. பயிற்சி ஆட்டத்திற்கே 5 ஆயிரம் ரசிகர்கள் வந்திருப்பது குறித்து கேட்ட கேள்விக்கு, “எங்களுக்காக அதிக ரசிகர்கள் வந்து ஆதரவு அளித்ததை நினைத்து நான் மகிழ்ச்சியடைகின்றேன். நாங்கள் எப்போதெல்லாம் ஆஸ்திரேலியா வந்து விளையாடுகிறோமோ அப்போதெல்லாம் கூட்டம் இல்லாமல் இருந்தது கிடையாது’’ என்றார் ரோகித் சர்மா.
The post பயிற்சி ஆட்டம் பயனுள்ளதாக இருந்தது: இந்திய கேப்டன் ரோகித்சர்மா பேட்டி appeared first on Dinakaran.