தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. வீடியோ கால் மூலம் பாதிப்புகளை கேட்டறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை : கடலூர் மாவட்டம் மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார். ஃபெஞ்சல் புயல் காரணமாக அதிகனமழை பெய்ததால் சாத்தனூர் அணை நிரம்பியது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் தென் பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் வெள்ள சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கடலூர் முத்தையா நகரில் வெள்ள சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக தொடர்பு கொண்டு வெள்ள சீரமைப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடிய முதலமைச்சர் அவர்களின் தேவைகளை கேட்டறிந்தார். இதனிடையே விழுப்புரத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு மேற்கொள்கிறார்.

The post தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. வீடியோ கால் மூலம் பாதிப்புகளை கேட்டறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!! appeared first on Dinakaran.

Related Stories: