திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து, அணைக்கு வரும் 1,68,000 கன அடி நீர் அப்படியே தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படுவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதிக அளவில் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் தென்பெண்ணை ஆறு கரையோர கிராம மக்கள் மிக கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.