இளைஞர் நீதி குழுமத்திற்கு சமூக பணி உறுப்பினர்கள் நியமனம்

கரூர், டிச. 2: இளைஞர் நீதி குழுமத்திற்கு சமூக பணி உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,
2015ம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின்படி கரூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இளைஞர் நீதி குழுமத்திற்கு சமூக பணி உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்காக குறிப்பிடப்பட்ட தகுதிகளை கொண்ட தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இளைஞர் நீதி குழுமத்திற்கு ஒரு பெண் உட்பட இரண்டு சமூக பணி உறுப்பினர்கள, அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர் மற்றும் இந்த பதவி அரசுப் பணி அல்ல.

குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நaலப்பணிகளில குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவராக இருக்க வேண்டும். அல்லது குழந்தை உளவியல் மன நல மருத்துவம், சமூகவியல், அல்லது சட்டம் ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்று தொழில் புரிபவராக இருக்க வேண்டும். மேலும், பத்திரிக்கையில் செய்தி வெளியிடும் நாளில், விண்ணப்பத்தாரர்கள் 35 வயதுக்கு குறையாதவராகவும், 65 வயதை பூர்த்தி செய்யாதவராகவும் இருக்க வேண்டும்.

இதற்கான விண்ணபடிவத்தை அந்தந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். அல்லது துறை சார்ந்த இணையதள முகவரியில் (https://dsdcpimms.tn.gov.in) இருந்து விண்ணப்பத்தாரர் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தகுதி வாய்ந்த நபர்கள் அந்த பதவிக்கு அதற்கான அமைந்த படிவத்தில் (செய்தி வெளியீடு நாளில் இருந்து 15 நாட்கள்) குறிப்பிட்ட முகவரியில் பெறுமாறு விண்ணப்பிக்க வேண்டும். இயக்குநர், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, எண் 300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிபபடையில் நியமனம் அமையும், இது குறித்து அரசின் முடிவே இறுதியானது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post இளைஞர் நீதி குழுமத்திற்கு சமூக பணி உறுப்பினர்கள் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: