×
Saravana Stores

திருப்பூரில் விட்டு விட்டு பெய்த சாரல் மழை

 

திருப்பூர், டிச.2: பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் நேற்று முன்தினம் காலை முதல் கனமழை பெய்து வந்தது. திருப்பூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாகவே சாரல் மழை பெய்து வந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்று காலை முதல் சாரல் மழையானது விட்டு விட்டு பெய்தது. இதனால் வானம் மேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது. இடைவெளி விட்டு விட்டு பெய்த கனமழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது.

இதனால் விடுமுறை நாளான நேற்று பொதுமக்கள் வெளியில் செல்லாமல் தங்கள் வீடுகளிலேயே முடங்கினர். சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியும், ரெயின் கோட் அணிந்தபடியும் சென்றனர். இன்றும் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post திருப்பூரில் விட்டு விட்டு பெய்த சாரல் மழை appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Benjal ,Tamil Nadu ,Tirupur district ,Dinakaran ,
× RELATED இன்றும் தியேட்டர்கள் மூடலா?