இதுதொடர்பாக அவர்அனுப்பிய சுற்றறிக்கை:
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்களின் பாதுகாப்புக்கு எதிரான செயல்களுக்காக வழங்கும் தண்டனை சட்டப்பிரிவு குறித்த அறிவிப்பினை பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்த வேண்டும். மருத்துவமனைப் பாதுகாப்புக் குழு உள்ளிட்ட குழுக்களை ஏற்படுத்துதல், காவல் துறையுடன் இணைந்த கூட்டாய்வு மற்றும் அவசர காவல் உதவி பெறுவதற்கான வழிவகைகள் செய்ய வேண்டும்.
போதுமான வெளிச்சம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோயாளிகள்/ வெளிநபர்கள் நுழைவதை முறைப்படுத்துவது, சுற்றுச்சுவர் அமைத்தல் மற்றும் இரவுக் காவலர் நியமனம் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாவட்ட சுகாதாரப்பகுதி அளவில் நேரிடையாகவும், காணொளிக் காட்சி வாயிலாகவும் நடத்தப்படும் ஆய்வுக்கூட்டங்கள் உள்ளிட்ட எந்தக் கூட்டங்களும் அலுவலக நேரம் கடந்தோ, விடுமுறை நாட்களிலோ நடத்தப்படக் கூடாது.
பயனாளிகள் பதிவேற்றம் செய்யவேண்டிய மகப்பேறு முன்கவனிப்பு, மகப்பேறு, தடுப்பூசித் திட்டம் தொடர்புடையப் பதிவுகளை அவர்கள் தாமாகவே பதிவு செய்வதை ஊக்கப்படுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட இணையதளத்தில் பயனாளிகள் பதிவேற்றம் செய்ய வேண்டியப் பதிவுகளை அவர்கள் பதிவு செய்யாமல், களப்பணியாளர்களே பதிவேற்றம் செய்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
The post ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்: செல்வவிநாயகம் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.