தமிழகம் முழுவதும் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு அந்தந்த பகுதியில் உள்ள தேமுதிக சார்பாக இயன்றதை செய்வோம், இல்லாதவர்க்கே என்ற வகையில் நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க வேண்டும். விவசாய பெருமக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சாலைகள் துண்டிக்கப்பட்டு, அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல், மின்சாரம் இல்லாமல், உண்ண உணவு இல்லாமல் இந்த மழை பாதிப்பால் மக்கள் சிரமத்திற்கு உள்ளான நிலைமையில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே அந்த பகுதியில் இருக்கும் நமது கழக நிர்வாகிகள் நேரடியாக கள ஆய்விற்குச் சென்று நம்மால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்து, ஆறுதல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு பிரேமலதா கூறியுள்ளார்.
The post பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ பிரேமலதா வேண்டுகோள் appeared first on Dinakaran.