சென்னை: பெஞ்சல் புயல் தாக்கத்தால் நேற்று முன்தினம் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது, புயல் காரணமாக பலத்த காற்று வீசியதால் சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் இருந்த மணல் அடித்து வரப்பட்டு லூப் சாலையில் தேங்கியது, மேலும் சாலையில் அங்காங்கே மணல் திட்டுகள் இருந்தன, இதனால் அச் சாலையில் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று மழை குறைந்ததும் சாலையில் தேங்கிய மணல் திட்டுகளை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஜேசிபி இயந்திரங்கள் மூலம் சாலையில் இருந்த மணல் திட்டுகளை எடுத்து வந்து மீண்டும் கடற்கரை பரப்பில் சேர்த்தனர். இதையடுத்து மீண்டும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. மேலும் பட்டினப்பாக்கம் கடற்கரையில் புயலின் தாக்கதால் குவிந்த குப்பைகளை அகற்றும் பணியிலும் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
The post பட்டினப்பாக்கம் லூப் சாலையில் மணல் அகற்றம் appeared first on Dinakaran.