×
Saravana Stores

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர்: ஒகேனக்கல் காவிரியில், தொடர்ந்து 3வது நாளாக நேற்றும் நீர்வரத்து விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 4,528 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 5,195 கனஅடியாக அதிகரித்தது. நேற்று முன்தினம் 110.37 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 110.58 அடியாக உயர்ந்தது. நீர்இருப்பு 79.23 டிஎம்சியாக உள்ளது.

The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Mettur Dam ,Mettur ,Okanagan Cauvery ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணை நீர் மட்டம் மீண்டும் உயர்கிறது