விலையில் இருவருக்கும் உடன்பாடு ஏற்படாததால் முடவன்குளத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகரும், ரியல் எஸ்டேட் புரோக்கருமான சுப்பிரமணி (38), கூத்தங்குழியைச் சேர்ந்த சரோ ஆகியோருடன் சேர்ந்து டான் பாஸ்கோ மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். திசையன்விளையில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்புக்கு மீண்டும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த டான் பாஸ்கோ உட்பட 3 பேர் சேர்ந்து சிபு ஆண்டனியை கடத்திச் சென்று, ஆற்றங்கரைபள்ளிவாசலில் உள்ள ஹாலோ பிளாக் கம்பெனியில் அடைத்து வைத்து 30 சென்ட் நிலத்தை மிரட்டி எழுதி வாங்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் திசையன்விளை போலீசார் டான்பாஸ்கோ, சுப்பிரமணி ஆகிய 2 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சரோ என்பவரை தேடி வருகின்றனர்.
The post ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் அதிமுக பிரமுகர் அதிரடி கைது appeared first on Dinakaran.