இது குறித்து ஆர்எம்ஓ மாரிமுத்துவிடம் தெரிவித்தார். அவர், உடனடியாக மருத்துவமனை கழிப்பறைக்கு சென்று பார்த்தார். அப்போது, அங்கிருந்த பிரஷ்ஷில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.
ரகசிய கேமராவை வைத்தது யார்? என்று சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியதில், மருத்துவமனையில் 3ம் ஆண்டு எம்எஸ் ஆர்த்தோ பயிற்சி மருத்துவராக பணியாற்றும் பயிற்சி டாக்டர் வெங்கடேஷ் (33) என்பவர் கழிப்பறை பிரஷ்ஷில் ரப்பர் பேண்ட் கட்டி ரகசியமாக பேனா வடிவிலான கேமராவை வைத்து கண்காணித்து வந்தது தெரியவந்தது.
இது தொடர்பான புகாரின்பேரில் போலீசார் பயிற்சி டாக்டர் வெங்கடேஷை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். வெங்கடேஷ் பயன்படுத்திய ரகசிய கேமரா 12 நாட்களுக்கு முன்பு ஆன்லைன் மூலம் ஆர்டர் வாங்கியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், வெங்கடேஷ் மற்ற மருத்துவமனையில் இதுபோன்று வேறு ஏதாவது பகுதியில் கழிப்பறைகளில் கேமரா வைத்து பெண்களை ரசித்து இருப்பாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் டாக்டர் வெங்கடேஷ், கோவை ஜேஎம்-1 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் கோவை மத்திய சிறையிலடைக்கப்பட்டார்.
The post பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பெண் டாக்டர், நர்சு கழிப்பறையில் ரகசிய கேமரா வைத்து ரசித்த டாக்டர் சிக்கியது எப்படி?: பரபரப்பு தகவல்கள் appeared first on Dinakaran.