பேராசிரியை ஷெர்லின் கோல்டா தற்போது 5 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். இதனால் கல்லூரியில் விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்து வந்தார். கடந்த சில மாதங்களாக தம்பதி இடையே கருத்துவேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 22ம்தேதி இரவு தம்பதி இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து பிரவீன்குமார், குளியலறை சென்ற நேரத்தில் ஷெர்லின் கோல்டா, வீட்டின் பெட்ரூமில் சேலையால் தூக்கிட்டு தொங்கினார். குடும்பத்தினர் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து நாசரேத் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே பேராசிரியை ஜெர்லின் கோல்டாவின் தந்தை ஜெபசிங் சாமுவேல், தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாகவும் இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என கடந்த 25ம்தேதி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக ஜெபசிங் சாமுவேலிடம், உடையார்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் விசாரணை நடத்தினார்.
அப்போது தாயை இழந்த பிஞ்சு குழந்தையான டிஜோ, தனது தாய் ஷெர்லினை தன் தந்தை பிரவீன் அடித்துவிட்டதால் இறந்து போயிட்டார் என மழலை மொழியில் பேசியுள்ளார். இந்த காட்சியை உறவினர்கள் செல்போனில் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். தாய் மர்மமாக இறந்த நிலையில் அவரது 4 வயது மகன் பேசிய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும் பேராசிரியை ஷெர்லின் கோல்டா தற்கொலை செய்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
The post கர்ப்பிணி பேராசிரியை சாவில் மர்மம்: 4 வயது மகன் பேசிய `வீடியோ’ வைரல் appeared first on Dinakaran.