டெல்லி: புதுச்சேரி அருகே நகராமல் நிலை கொண்டிருந்த ஃபெஞ்சல் புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 12 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. புதுச்சேரி அருகே கடலூருக்கு 30 கி.மீ. வடக்கிலும் விழுப்புரத்துக்கு 40 கி.மீ. கிழக்கிலும் தாழ்வு மண்டலம் நீடிக்கிறது. அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கக் கூடும். சென்னைக்கு 120 கி.மீ. தெற்கு – தென்மேற்கில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது
The post பெஞ்சல் புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது appeared first on Dinakaran.