- பிரதமர் மோடி
- எழுந்த நாள்
- எல்லை
- பாதுகாப்பு படை
- தில்லி
- மோடி
- எல்லை பாதுகாப்பு படை எழுச்சி தினம்
- எல்லை பாதுகாப்பு படை
- முகாமில்
- இந்தியா
- எல்லை பாதுகாப்பு படை உயரும் நாள்
- தின மலர்
டெல்லி: எல்லை பாதுகாப்பு படை எழுச்சி தினத்திற்கு மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் சர்வதேச எல்லையை பாதுகாக்கும் பணியை மேற்கொண்டு வரும் ‘எல்லை பாதுகாப்பு படை'(BSF) சுமார் 2.65 லட்சம் வீரர்களுடன் உலகின் மிகப்பெரிய எல்லை காவல் படையாக விளங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1-ந்தேதி எல்லை பாதுகாப்பு படையின் எழுச்சி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று எல்லை பாதுகாப்பு படையின் எழுச்சி தினத்தையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எல்லை பாதுகாப்பு படைக்கு எழுச்சி தின வாழ்த்துகள். தைரியம், அர்ப்பணிப்பு மற்றும் இணையற்ற சேவை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு முக்கியமான தற்காப்பு அமைப்பாக எல்லை பாதுகாப்பு படை உள்ளது. அவர்களின் விழிப்புணர்வும், தைரியமும் நமது தேசத்தின் பாதுகாப்பிற்கு பங்களிக்கின்றன” என்று பதிவிட்டுள்ளார்.
The post தைரியம், அர்ப்பணிப்பு மற்றும் இணையற்ற சேவை.! எல்லை பாதுகாப்பு படை எழுச்சி தினத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து appeared first on Dinakaran.