திருவண்ணாமலை: தொடர்மழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனுர் அணை முழு கொள்ளளவை எட்ட உள்ள நிலையில் கரையோரம் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 117 அடி உள்ள நிலையில் அணைக்கு வரும் 5000 கன அடிநீர் அப்படியே தென்பெண்ணையாற்றில் வெளியேற்றப்படுகிறது.