- சையத் முஷ்டாக் அலி
- டி 20
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- குஜராத்
- இந்தூர்
- சையத் முஷ்டாக் அலி டிராபி
- சையத் முஸ்தாக் அலி கோப்பை
- மும்பை
- ஹைதெராபாத்
- ராஜ்கோட்
- சையது
- முஷ்டாக் அலி
- தின மலர்
இந்துார்: 17வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டியில் நேற்று, தமிழ்நாடு அணியை குஜராத் வென்றது. சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான போட்டிகள், மும்பை, ஐதராபாத், ராஜ்கோட், இந்துார் உள்பட பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன. இந்துாரில் நேற்று நடந்த போட்டியில் தமிழ்நாடு – குஜராத் அணிகள் மோதின. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த குஜராத் அணி, 20 ஓவர்களில் 133 ரன் எடுத்தது. ஹேமங் பட்டேல், 34 பந்தில் அவுட்டாகாமல் 50 ரன் குவித்தார். தமிழ்நாடு வீரர்கள் சந்தீப் வாரியர், குர்ஜப்னீத் சிங், முகம்மது தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர், 134 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் தமிழ்நாடு வீரர்கள் களமிறங்கினர். ஆனால் குஜராத் வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட்டாகினர். இறுதியில் தமிழ்நாடு, 18.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ரன் மட்டுமே எடுத்து, 19 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. தமிழ்நாட்டின் ஷாருக்கான் 33, ரித்திக் ஈஸ்வரன் 22, சாய் கிஷோர் 21 ரன் எடுத்தனர். குஜராத்தின் அர்ஸன் நக்வஸ்வாலியா 4, சிந்தன் கஜா 3, அக்சர் பட்டேல் 1 விக்கெட் வீழ்த்தினர். இந்த தொடரில் இதுவரை 4 போட்டிகளில் ஆடியுள்ள தமிழ்நாடு அணி 2ல் தோல்வியை தழுவி உள்ளது.
The post சையத் முஷ்டாக் அலி டி20 தமிழ்நாடு அணி குஜராத்திடம் தோல்வி appeared first on Dinakaran.