புதுடெல்லி: சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் 2025ம் ஆண்டு, பிப்ரவரி – மார்ச் மாதங்களில் நடைபெற உள்ளன. பாகிஸ்தானில் தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால், இப்போட்டிகள் அங்கு நடந்தால் வீரர்களை அனுப்ப மாட்டோம் என்றும், இரு நாடுகளுக்கும் பொதுவாக துபாய் போன்ற இடத்தில் போட்டிகளை நடத்த வேண்டும் என்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) திட்டவட்டமாக கூறியுள்ளது. ஆனால், அதை ஏற்க முடியாது என பிசிபி பிடிவாதம் செய்கிறது.
இதனால் போட்டிகளுக்கான இறுதி அட்டவணையை வெளியிட முடியாமல் சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) திணறி வருகிறது. பாக். தன் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என ஐசிசி வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்சில், எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரிய தலைவர் முபாஷிர் உஸ்மானியை, பிசிபி தலைவர் மோஷின் நக்வி நேற்று சந்தித்து பேசினார். இந்தியா கலந்து கொள்ளும் போட்டிகளை துபாயில் நடத்துவது தொடர்பாக இந்த பேச்சுவார்த்தை நடந்திருக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன.
The post எமிரேட்ஸ்-பிசிபி தலைவர்கள் சந்திப்பு: துபாயில் சாம்பியன்ஸ் கோப்பை போட்டி? appeared first on Dinakaran.