×
Saravana Stores

கடலோர மாவட்டங்கள் பாதிப்பு போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும்: பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

சென்னை: போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் மழைப்பொழிவு இருந்து வருகிறது. இந்த நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள பெஞ்சல் புயல், வெள்ள பாதிப்புகளை மேலும் அதிகரித்துள்ளது.

தொடர் மழை மற்றும் புயல் பாதிப்புகள் தொடரும் நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை வேகப்படுத்த வேண்டும் குறிப்பாக, திருவாரூர் மாவட்டத்தின் முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி ஆகிய பகுதிகளில் தொடர் மழையால் பயிர்கள் மூழ்கியுள்ளன. நாகை மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை சாகுபடி பெருமளவு பாதித்துள்ளது. சில இடங்களில் 80% வரை பாதிப்பு இருக்கிறது.

மீனவர்கள், புயல் காரணமாக வலைகள் அறுந்தும், படகுகள் சேதமாகியும் வாழ்வாதாரத்தை இழந்திருக்கிறார்கள். வீடுகள் உடைமைகளை இழந்திருப்பதுடன், வருமான வாய்ப்புகளும் அற்றுப் போயுள்ளார்கள். 16வது நிதி ஆணையத்தின் முன் தமிழ்நாடு அரசு வைத்துள்ள கோரிக்கையை ஏற்று, காலநிலை சார்ந்த அளவுகோலையும் நிதிப் பங்கீட்டில் இணைத்திட வேண்டும்.

The post கடலோர மாவட்டங்கள் பாதிப்பு போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும்: பாலகிருஷ்ணன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Balakrishnan ,Chennai ,Secretary of State ,Marxist Party ,Tamil Nadu ,Nagapattinam ,Thiruvarur ,Mayiladuthura ,Thanjavur ,
× RELATED கே.பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதி!!