×
Saravana Stores

பெஞ்சல் புயல் பாதிப்பு திமுகவில் உதவிக்கு வார் ரூம்

சென்னை: திமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிவிப்பு: பெஞ்சல் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு முழு வேகத்தில் செயல்படுத்தி வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்தாலும் இதுவரையிலும் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை. எனினும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி திமுக தலைமைக்கழகத்தில் வார் ரூம் தயார் நிலையில் உள்ளது. உதவிகள் தேவைப்படுகிறவர்கள் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்கிறோம். மாநில உதவி எண்: 1070 வாட்ஸப்: 944869848, சென்னை மாநகராட்சி, உதவி எண்: 1913. திமுக தலைமைக்கழக வார் ரூம்:8069446900. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post பெஞ்சல் புயல் பாதிப்பு திமுகவில் உதவிக்கு வார் ரூம் appeared first on Dinakaran.

Tags : Benjal ,CHENNAI ,DMK ,Tamil Nadu government ,Chief Minister ,M.K.Stalin ,Benjal storm ,Dinakaran ,
× RELATED இன்றும் தியேட்டர்கள் மூடலா?