சென்னை: பெஞ்சல் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் நேற்று தியேட்டர்கள் மூடப்பட்டிருந்தன. பெஞ்சல் புயல் காரணமாக, தமிழ்நாட்டின் பல இடங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. சென்னையிலும் பலத்த காற்றுடன் மழை நீடித்தது. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்கள் மூடப்படும் என தியேட்டர் அதிபர்கள் அறிவித்தனர்.
இதையடுத்து நேற்று 4 காட்சிகளும் தியேட்டர்கள் மூடப்பட்டிருந்தன. புதுச்சேரியில் நேற்று மாலை மற்றும் இரவு காட்சிகள் தியேட்டர்களில் ரத்து செய்யப்பட்டன. வானிலை நிலவரத்துக்கு ஏற்ப தியேட்டர்கள் இன்று இயக்கப்படுமா இல்லையா என்பது முடிவு செய்யப்படும் என தியேட்டர் அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.
The post இன்றும் தியேட்டர்கள் மூடலா? appeared first on Dinakaran.