சென்னை: சென்னை முழுவதும் கனமழை வெளுத்து வாங்கியும் மெட்ரோ ரயில் சேவை எந்த தடையும் இன்றி இயக்கப்பட்டது. மின்சாரம் மற்றும் மழை நீர் பாதுகாப்பு காரணங்களுக்காக வடபழனி மெட்ரோ நிலையத்தில் நடைமேடை-1 நுழைவுப் பக்க எஸ்கலேட்டர் அணைக்கப்பட்டது. அதே போல் சென்னை மெட்ரோ ரயில் நிலையம், அரசு தோட்ட மெட்ரோ நிலையத்தில் எஸ்கலேட்டர் மற்றும் லிப்ட் அணைக்கப்பட்டது. ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் கால் மேல் பாலம் எஸ்கலேட்டர் 2 அணைக்கப்பட்டது.
பச்சையப்பாஸ் கல்லூரி மெட்ரோ ரயில் நிலையம் லிப்ட் நுழைவுப் பக்கம் அணைக்கப்பட்டது. செயின்ட் தாமஸ் மவுண்ட் மெட்ரோ ஸ்டேஷன் எஸ்கலேட்டர் 3, 6, 14, 18 மற்றும் 10 மற்றும் லிப்ட் 4 ஆகியவை அணைக்கப்பட்டது. மேலும்,அனைத்து மெட்ரோ நிலையங்களிலும் படிக்கட்டுகளைப் பயன்படுத்தும் போது பயணிகள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. கோயம்பேடு மெட்ரோ, செயின்ட் தாமஸ் மவுன்ட் மற்றும் அரும்பாக்கம் மெட்ரோ நிலையம் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் மூடப்பட்டது. மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டதால்மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
The post மெட்ரோ ரயில் சேவையில் பாதிப்பில்லை appeared first on Dinakaran.