கோவை மாவட்ட சிறுவர் சிறுமியர்களுக்கு சாதனையாளர் விருது

 

கோவை, நவ.30: தமிழ்ர்களின் பாரம்பரிய கலைகளான சிலம்பம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு, கோலாட்டம் தற்போது மீண்டும் தமிழக மக்களிடையே எழுச்சி அடைந்துள்ளது. இது போன்ற பாரம்பரிய கலைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு மதுரை முத்தமிழ் நாட்டுப்புற கலைகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பாக சர்வதேச முத்தமிழ் விருதுகள் ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இயல், இசை, நாடகம் மற்றும் விளையாட்டு துறையில் சாதித்த சிறுவர் சிறுமியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.  இதில், சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்களை வென்று கோவை மாவட்டத்திற்கு பெருமை பிரிக் பிட்னஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியை சேர்ந்த கனிஷ்கா, பிரியாஸ், கார்த்திகா, தேவி, வைஷாலி, முகிலேஷ், சரண், விஷ்வா, அருத்ரா ஸ்ரீ, விஷ்ணு ஹரிஷ், கீர்த்தனா நிசான், பாலாஜி ஆகியோருக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. மேலும், இவர்களுக்கு பயிற்சியளித்த பயிற்சியார் பிரபு ஆகியோருக்கு சேவா ரத்னா விருது வழங்கப்பட்டது.

The post கோவை மாவட்ட சிறுவர் சிறுமியர்களுக்கு சாதனையாளர் விருது appeared first on Dinakaran.

Related Stories: