கோடியக்கரையில் கடல் சீற்றம் 10 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

 

வேதாரண்யம்,நவ.30: கோடியக்கரையில் கடல் சீற்றமாக காணப்படுவதால் படகுகளையும் வலைகளையும் பாதுகாப்பான இடத்தில் வைக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற உள்ள நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கடல் மிகவும் சீற்றமாக காணப்படுகிறது. இரண்டு தினங்களுக்கு முன்பாக கடற்கரை ஓரத்தில் இருந்த பைபர் படகுகள் பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

இருப்பினும் அதிகமாக கடல் சீற்றமானதால் கடற்கரை ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த வலைகள் கடல் மணலில் புதைந்தன, படகுகள் வைக்கப்பட்டிருந்த இடம் வரை கடல் நீர் சூழ்ந்தது. கடல் நீர் சூழ்ந்த பைபர் படகுகளையும், டிராக்டர் மூலம் எடுத்து வெகு தூரத்தில் தள்ளி வைத்துள்ளனர். மேலும் வலைகளையும் பாதுகாப்பான இடத்தில் வைக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த 10 நாட்களாக மீன்பிடிக்க செல்லாத நிலையில் படகுகளை பாதுகாக்கும் பணியிலும் வலைகளை சரி செய்யும் பணியிலும் மீனவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இயற்கை இடர்பாடுகள் நீங்கி மீன்பிடிக்க செல்ல இன்னும் குறைந்தபட்சம் ஒருவராலும் ஆகும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

The post கோடியக்கரையில் கடல் சீற்றம் 10 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை appeared first on Dinakaran.

Related Stories: