தொடர் மழை காரணமாக கரூரில் ரெயின் கோட் விற்பனை அமோகம்

 

கரூர், நவ. 30: கரூர் மாவட்டம் முழுதும் கடந்த சில நாட்களாக பெங்கல் புயல் சின்னம் காரணமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.  இந்த மழையின் காரணமாக மாவட்டம் முழுதும் சீதோஷ்ணநிலையில் மாற்றம் ஏற்பட்டு இதமான நிலை நிலவி வருகிறது. மேலும், அவ்வப்போது பெய்து வரும் மழையின் காரணமாக மக்கள் அனைவரும் பல்வேறு சிரமங்களுககு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், கரூர் திண்டுக்கல் சாலை, தாந்தோணிமலை போன்ற பல்வேறு பகுதிகளில் பெங்களூர் பகுதியில் கொண்டு வரப்பட்ட ரெய்ன் கோட் அதிகளவு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குளிருக்கும், மழைக்கும் இதுபோன்ற ரெய்ன் கோட் பாதுகாப்பு அளிக்கும் என்பதால் பெரும்பாலான மக்கள் இதனை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். மேலும், ஒரு கோட் ரூ.500ல் இருந்து அதன் தரத்துக்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post தொடர் மழை காரணமாக கரூரில் ரெயின் கோட் விற்பனை அமோகம் appeared first on Dinakaran.

Related Stories: