கிருஷ்ணகிரி, நவ.30: கிருஷ்ணகிரி கனிம வளத்துறை உதவி அலுவலர் முத்து மற்றும் அதிகாரிகள், கிருஷ்ணகிரி – ராயக்கோட்டை சாலையில், வடுகம்பட்டி பஸ் ஸ்டாப் அருகே ரோந்து பணி சென்றனர். அப்போது அங்கு கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் லாரியை சோதனை செய்தனர். அதில் ₹2 ஆயிரம் மதிப்பிலான ஒரு யூனிட் கருங்கற்களை கடத்தி வந்தது தெரியவந்தது. அந்த லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து, கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, லாரியின் டிரைவர், உரிமையாளர் மற்றும் எங்கிருந்து கருங்கற்கள் கடத்தி வரப்பட்டது என விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கற்கள் கடத்திய லாரி பறிமுதல் appeared first on Dinakaran.