தக்கலை பெண்கள் சிறைச்சாலை நூலகத்துக்கு புத்தகங்கள்

தக்கலை, நவ.30 : பத்மநாபபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் தக்கலை பெண்கள் சிறைச்சாலை நூலகத்துக்கு நூல்கள் சேகரிப்பு மற்றும் வழங்கும் நிகழ்ச்சி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. கூடுதல் மாவட்ட நீதிபதி ராமச்சந்திரன் தலைமை வகித்தார். சார்பு நீதிபதியும், வட்ட சட்டப்பணிகள் குழு தலைவருமான மாரியப்பன் வரவேற்றார். பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, வழக்கறிஞர் சங்க தலைவர் பொன்ராஜ், குற்றவியல் தலைமை நடுவர் சாமுவேல் பெஞ்சமின் வாழ்த்திப் பேசினர். மாவட்ட முதன்மை நீதிபதி கார்த்திகேயன் நூல்களை சிறைச்சாலை கண்காணிப்பாளர் அமலோற்ப மேரியிடம் வழங்கி பேசினார். குற்றவியல் நடுவர் பிரவின் ஜீவா நன்றி கூறினார்.

இந் நிகழ்வில் பயிற்சி நிதிபதிகள் இம்மாகுலேட் புத்தா, ஜோதி கைலாஷ், அரசு வழக்கறிஞர் ஜாண்சன் மற்றும் வழக்கறிஞர்கள், தக்கலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் இம்மானுவேல் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். கூடுதல் மாவட்ட நீதிபதி ராமச்சந்திரன் பேசுகையில், சிறைச்சாலை தண்டிக்கும் இடமாக இருக்க கூடாது என காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் கூறியுள்ளனர். இவர்கள் திருந்தி இயல்பு வாழ்க்கைக்கு செல்லும் இடமாக அமைய வேண்டும், தண்டனையை பொறுத்த வரையில் நாம் சீர்திருத்த கோட்பாட்டை தான் பின்பற்றுகிறோம். அவர்கள் சிறையில் இருக்கும் போது நூல்களை படித்தால் அவர்கள் இ்யல்பு வாழ்க்கையில் சென்று விடுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

The post தக்கலை பெண்கள் சிறைச்சாலை நூலகத்துக்கு புத்தகங்கள் appeared first on Dinakaran.

Related Stories: