தனியார் நிறுவன ஊழியர் மீது தாக்குதல் 3 பேர் மீது வழக்கு

தக்கலை, நவ.30: தக்கலை அருகே உள்ள மேக்காமண்டபத்தை அடுத்த சாமிவிளையை சேர்ந்தவர் விஜின் (23). சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் மகேஷ்(35). இருவரிடையே திருமண வீடு ஒன்றில் ஏற்பட்ட முன்விரோதம் காணமாக பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில் பிலாங்காலை வெட்டுக்காட்டுவிளை பகுதியில் விஜின் நின்று கொண்டிருக்கும் போது, மகேஷ் மற்றும் இருவர் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதனை தடுக்க வந்த பிரபின், ஜோசின்ராஜ் ஆகியோர் மீதும் தாக்குதல் நடத்தினர். இதில் காயமடைந்த 3 பேரும் தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மகேஷ் உள்ளிட்ட 3 பேர் மீது தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post தனியார் நிறுவன ஊழியர் மீது தாக்குதல் 3 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: