குளச்சல் அருகே பேரன் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை

குளச்சல், நவ.30: குளச்சல் அருகே உள்ள லியோன் நகரை சேர்ந்தவர் வர்க்கீஸ் (58). மீனவர். அவரது மனைவி சகாய மேரி(54). இந்த தம்பதிக்கு சகாய டேனியல் மோன் என்ற மகனும், சகாய லிபியா மோள் என்ற மகளும் உள்ளனர். இதில் சகாய லிபியா மோளுக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் அவரது 2வது மகன் லிஜோன் (8) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 45 நாட்களுக்கு முன்பு இறந்து விட்டான். பேரன் இறந்த சோகத்தில் இருந்து மீள முடியாமல் சகாய மேரி இருந்து வந்ததாக தெரிகிறது. இதற்கிடையே வர்க்கீஸ், மகன் சகாய டேனியல் மோன்மீன் பிடிக்க கடலுக்கு சென்று விட்டனர். தாய், மகள் ைசமன் நகரில் உள்ள அவர்களுடைய மற்றொரு வீட்டில் இருந்து வந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மகள் லியோன் நகருக்கு வந்து விட்டார். சகாயமேரி மட்டும் சைமன் நகரில் இருந்தார். பேரன் இறந்ததை நினைத்து வருந்திய அவர் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சென்ற குளச்சல் போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சகாய லிபியா மோள் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post குளச்சல் அருகே பேரன் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: