- வேலூர் மாவட்டம்
- வேலூர்
- கலெக்டர்
- சுப்புலட்சுமி
- சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்
- தென்மேற்கு வங்காள விரிகுடா
- தின மலர்
வேலூர், நவ. 30: வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் 29ம் தேதி மாலை 4.15 நேரமிட்ட அறிக்கையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அதே பகுதிகளில் ‘பெஞ்சல்’ புயலாக வலுப்பெற்றது. நாகப்பட்டினத்திலிருந்து சுமார் கிழக்கே 260 கி.மீ. தொலைவிலும், புதுவையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 270 கி.மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து தென்கிழக்கே கிழக்கே 300 கி.மீ. தொலைவிலும் நிலைக்கொண்டுள்ளது. இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக- புதுவை கடற்கரையை காரைக்காலிற்கும், மகாபலிபுரத்திற்கும் இடையே புதுவைக்கு அருகே இன்று 30ம் தேதி மதியம் புயலாக கடக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரிரு இடங்களில் கனமுதல் மிக கனமழையும், தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 70 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மழை, புயலினால் ஏற்படும் பலத்த தரைக்காற்று ஆகிய காரணங்களால் வேலூர் மாவட்டத்தில் இன்று அனைத்து உள்ளாட்சிகளிலும் நடைபெறுவதாக இருந்த தீவிர தூய்மைப்பணி மற்றும் டெங்கு கொசு ஒழிப்பு பணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. இதற்கான நாள் பின்னர் அறிவிக்கப்படும். மேலும் மதியம் புயல் கரையை கடக்கும் நேரத்தில் வேலூர் மாவட்டத்தில் தரைக்காற்று வேகமாக வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
The post 70 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசும் இன்று வெளியே வரவேண்டாம் மக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை புயலால் வேலூர் மாவட்டத்தில் appeared first on Dinakaran.