×
Saravana Stores

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பூங்கா, கடற்கரை பகுதி இன்று மூடல்: சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

சென்னை: மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூங்காக்கள் மற்றும் கடற்கரை பகுதிகள் இன்று மூடப்படும் என்று சென்னை மாநராட்சி ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார். பெஞ்சல் புயல் காரணமாக, மெரினா கடற்கரையில் வழக்கத்தை விட அலைகள் மிகவும் ஆக்ரோஷத்துடன் காணப்படுகிறது. அலை 8 அடி முதல் 12 அடி உயரத்திற்கு எழும்புகிறது. மெரினா கடற்கரை சுற்றுலா தலம் என்பதால் எப்போதும் பொதுமக்கள் கடல் அழகை ரசிக்க வந்து செல்வது வழக்கம். ஆனால் தற்போது பெஞ்சல் புயல் காரணமாக காற்றின் வேகமும் அதிகமாக இருப்பதால் மெரினா முதல் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் வரை மணலுடன் சூறைக்காற்று வீசுகிறது.

எனவே பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி பெருநகர சென்னை மாநகராட்சியில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூங்காக்கள் மற்றும் கடற்கரை பகுதிகள் மூடப்படுகிறது என்று சென்னை மாநராட்சி ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார். இதையடுத்து அண்ணா சதுக்கம், மெரினா கடற்கரை முதல் பட்டினப்பாக்கம் வரையும், பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை பகுதிகளும் போலீசார் ரோந்து வாகனம் மூலம், உயிர் காக்கும் குழுவினர் மற்றும் குதிரைப்படையினரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். புயல் காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்காவும் இன்று மூடப்படுகிறது.

The post மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பூங்கா, கடற்கரை பகுதி இன்று மூடல்: சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Corporation ,Chennai ,Metropolitan Commissioner ,Kumaraguruparan ,Benjal ,Marina beach ,Dinakaran ,
× RELATED மாநகராட்சியின் வருவாயை பெருக்கும்...